போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போர்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருகோணமலை வளாகத்துக்குள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய வேண்டும் எனவும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *