புதுமுகங்களுடன் இலங்கை வருகிறது இங்கிலாந்து அணி

இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு T-20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

இதற்கான இங்கிலாந்து அணியின் ஒருநாள் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று டெஸ்ட் குழாமை இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில், சர்ரே அணியின் அரம்ப துடுப்பாட்ட ரோரி பேர்ன்ஸ், ஜோய் டெய்னி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ஸ்டோன் ஆகிய புதுமுக வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் போட்டியின் அணிக்கான பட்டியலில் 24 வயதான ஒலி ஸ்டோன் உள்வாங்கப்பட்ட நிலையில், அந்த அணியின் தலைவரின் அழைப்பில் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே இந்தியாவுடன் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டிய சாம் குரானும் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்ட 16 பேர் அடங்கிய அணி விபரம் வருமாறு,

அணித்தலைவர் ஜோய் ரூட், மோகின் அலி, ஜிம்மி ஆண்டர்சன், ஜோனி பிர்ஸ்டோவ், ரோரி பேர்ன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டூவர்ட் பிரோட், ஜோஸ் பட்லர், சாம் குரான், ஜோய் டெய்னி, கீட்டன் ஜென்னிங்ஸ், ஜாக் லீச், ஒலி போப், அடில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நவம்பர் 6 முதல் 10 ஆம் திகதி வரையும், 2 ஆவது போட்டி கண்டியில் 14 முதல் 18 வரையும், 3 ஆவது டெஸ்ட் போட்டி 23 முதல் 27 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *