தலவாக்கலையில் இரவில் தலைகாட்டியது இ.தொ.கா.! – பட்டாசு கொளுத்தி ஆதரவாளர்கள் வரவேற்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரியும், கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்தும் வகையிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் தலவாக்கலையில் இன்று பகல் நடைபெற்ற நிலையில் – இரவுவேளையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அங்கு வரவேற்பு நிகழ்வொன்றை நடத்தியுள்ளது.

போராட்டத்தின் மூலம் தமது பலத்தை வெளிப்படுத்திய தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குப் பதிலடி நடவடிக்கையாகவே இ.தொ.காவால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளமையால், பதில் முதலமைச்சராக, மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்து கலாசார மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மருதபாண்டி இராமேஸ்வரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதியின் இலங்கைக் குழுவில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் இடம்பிடித்திருந்தார்.

இதையடுத்து மாகாண அமைச்சரான இ.தொ.காவின் உப தலைவர் மருதபாண்டி இராமேஸ்வரன் பதில் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் இன்று கடமையையும் பொறுப்பேற்றார். பதவியேற்ற கையோடு தலவாக்கலை சென்றார்.

தலவாக்கலை நகரில் இரவு 7 மணியளவில் பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி மருதபாண்டி இராமேஸ்வரனை வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *