புதிய அனிமேஷன் டூடுலை அறிமுகம் செய்த கூகுள்!

தற்போதுள்ள நெருக்கடி சூழலில் கொவிட் தடுப்பூசிகள் தான் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி , இன்றைய கூகுள் டூடுல் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு மக்களை நினைவூட்டும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொவிட்19 தொற்றுக்கு எதிராக தங்கள் மக்களை தடுப்பூசி எடுத்து கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.

கொவிட் -19 வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு மக்களை வலியுறுத்தும் வகையில் இந்த டூடுலை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. கூகுள் டூடுல் என்பது கூகுள் சர்ச் எஞ்சினின் முகப்புப்பக்கத்தில் கூகுளின் நிரந்தர லோகோவுக்கு பதிலாக சிறப்பு சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக தோன்ற வைக்கப்படும். முக்கிய விழாக்கள், பிரபலங்களின் சாதனைகள் மற்றும் பிறந்தநாள் மற்றும் விடுமுறை நாட்களின் சிறப்பை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு அனிமேஷன்கள் மூலம் கூகுள் நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்படுவது ஆகும்.

மேலும் ,மக்களிடையே நிலவும் அச்சம் மற்றும் தயக்கம் காரணமாக இன்னும் பலர் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் உலக நாடுகளின் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக புதிய அனிமேஷன் டூடுலை அறிமுகப்படுத்தி உள்ள கூகுள், “கொவிட் -19 தடுப்பூசிகள் புழக்கத்தில் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *