தேர்தலைத் தாமதப்படுத்தாதீர்! – பிரதமரிடம் சபாநாயகர் நேரில் இடித்துரைப்பு

மாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான மீளாய்வு அறிக்கையைக் கையளிப்பதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் மேலும் 2 மாத கால அவகாசத்தை சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.

அத்துடன், எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை மேலும் தாமதமாகுவதற்கு இருக்கும் சூழ்நிலை தொடர்பாக அமைச்சரவையில் விளக்கமளிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

சபாநாயகரை நேற்றுமுன்தினம் சந்தித்திருந்த மீளாய்வுக்குழ உறுப்பினர்கள், எல்லை நிர்ணயம் தொடர்பாக மேலும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் – இதனால் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் 2 மாத காலம் தாமதம் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது தொடர்பாக ஆராய்வதற்காக சபாநாயகர் நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

இக்கூட்டத்தின் போது, மீளாய்வுக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவையென்றால் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எப்படியாவது கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென பிரதமர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள மீளாய்வு குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை மேலும் தாமதமாகுவதற்கு இருக்கும் சூழ்நிலை தொடர்பாக அமைச்சரவையின் அவதானத்திற்குக் கொண்டு சென்று அங்கு பெற்றுக்கொள்ளப்படும் யோசனைகளை கட்சித் தலைவர்களிடம் முன்வைப்பதற்குத் துரித நடவடிக்கையெடுப்பதாகக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *