தலவாக்கலைப் போராட்டத்துக்கு தமிழ் ஆசிரியர் அமைப்புகளும் ஆதரவு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23 ஆம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள சம்பள உயர்வுப் போராட்டத்துக்கு மலையகத்திலுள்ள பல ஆசிரியர் அமைப்புகளும் ஆதரவை தெரிவித்துள்ளன.


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் குறித்து ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மேற்படி ஆதரவு அறிவிப்பை – இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் விடுத்தார்.

“ மலையக மக்களின் வாழ்வுரிமைப்போராட்டத்துக்கு அனைத்து தரப்புகளும் ஆதரவை வழங்கவேண்டும். இதுவரையில் பல சிவில் அமைப்புகள் நேசக்கரம் நீட்டியுள்ள நிலையில், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன. இதுவரவேற்கப்படவேண்டிய விடயமாகும்.


அந்தவகையில் இலங்கை கல்விச்சமூக சம்மேளனம், மலையக ஆசிரியர் விடுதலை முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி, ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகியன களமிறங்கவுள்ளன. அரசியல்பேதங்களுக்கு அப்பால் எம்மவர்களுக்காகவே நாம் ஆதரவு வழங்குகின்றோம்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *