முதலமைச்சர் வேட்பாளராக திஸ்ஸ?

“வெகுவிரைவில் செயற்பாட்டு அரசியலில் களமிறங்குவேன். தனிக்கட்சிக்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கியவருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க களமிறங்கவுள்ளார் என வெளியாகியுள்ள தகவல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் அரசியல் நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். பிரதான கட்சியொன்றின் பொதுச்செயலாளராக இருந்து பல தேர்தல்களை சந்தித்தவன் நான். எனவே, நேரம் வரும்போது மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்குவேன். அதற்கான நேரம் நெருங்கிவிட்டதாகவே உணர்கின்றேன்.

மாகாண சபைத் தேர்தல் என் இலக்கு அல்ல. நாட்டின் நலன் கருதியே இனி அரசியல் பயணம் தொடரும். அரசியல் சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் மாறக்கூடும்” – என்றார்.

எனினும், திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் பட்சத்தில் அல்லது மஹிந்த அணியுடன் பயணிக்கும் பட்சத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் எனத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *