South Asia Gateway Terminalsஇற்கு Mission Critical சேவையை வடிவமைக்கும் மொபிடெல்
மொபிடெல், இலங்கையின் முன்னணி கொள்கலன் முனைய செயற்படுத்துனரான South Asia Gateway Terminals (Pvt) Ltd (SAGT) இனால், பணி முக்கிய தொடர்பாடல்களுக்கான நம்பகமான சேவை வழங்குனராக தேசிய கைபேசி சேவை வழங்குனரான மொபிடெல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதால், ளுயுபுவுஇன் ஏக பங்காளர் என்ற வகையில், இந்த பங்காளித்துவம் மொபிடெல்லுக்கு முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.
இந்த மகிழ்ச்சிகரமான பங்காளித்துவத்தின் ஒரு அங்கமாக, கப்பல் துறைக்குள் SAGTஇன் மிக முக்கியமான பணிசார் தொடர்பாடல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ubiquitous LTE தொழிநுட்பம் சார் தொடர்பாடல் கட்டமைப்பு ஒன்றினை மொபிடெல் வழங்கியுள்ளது.
அவ்வாறு செய்வதன் மூலம், உலகின் பிரபலமான 3GPP standardised LTE தொழிநுட்பத்தினை பயன்படுத்தும் சாத்தியங்களில் இருந்து SAGT பயன் பெறுவதனை மொபிடெல் உறுதி செய்தது.
குறைந்த செலவுகள், வானொலி அலைவரிசை இடையீடுகளில் இருந்து பாதுகாக்கப்பட்ட வலையமைப்பினை உறுதி செய்வதற்கு அனுமதி பெற்ற அலைவரிசை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தொடர்பாடல்கள் நிரூபிக்கப்பட்ட வலையமைப்பு, மற்றும் செயற்பாடுகளில் மொபிடெல்லின் 25 வருட அனுபவம் ஆகியவற்றின்; மூலமும் SAGT பயன்பெறுகின்றது.
புதிதாக சேவை வழங்குனர் மற்றும் தேசிய கைபேசி சேவை வழங்குனராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள மொபிடெல், இலங்கையில் தகவல் தொலைத்தொடர்பு தொழிநுட்பத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.
தமது மூலோபாய வழியில் மொபிடெல்லின் பயணம், SAGTஇற்காக வழிநடத்தியுள்ள தீர்வின் மூலம் மேலும் வெளிப்படையாக உள்ளது.
பணி முக்கியத்துவம் மிக்க சேவைகளுக்கான பிரதான அளவுகோலான குறைக்கப்பட்ட செயலற்ற நிலைக்கு வலையமைப்பை மீள வடிவமைத்தல், அலைவரிசையை அதிகரித்தல் ஊடாக, துறைமுகத்தில் புவியியல் எல்லைகளிற்குள் மொபிடெல் சேவை நம்பகத்தன்மை உறுதி செய்ய வேண்டியதாக இருக்கின்றது.
தேசிய கைபேசி சேவை வழங்குனர் என்ற வகையில், ‘நாம் எப்போது அக்கறை செலுத்துவோம்’ என்ற வாக்குறுதியை செயற்பாட்டிற்கு உறுதி செய்துள்ளது.
மொபிடெல்லின் ஒப்பற்ற சேவை நம்பகத் தன்மைக்கு துறைமுகச் செயற்பாடுகளில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறனிற்கு மொபிடெல்லின் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட LTE வலையமைப்பு துணை புரிகின்றது.
தமது ஒட்டுமொத்த வர்த்தக ஆற்றலை ஏதுவாக்குவதற்கு கைபேசி தொழிநுட்பங்களுடன் தனித்துவமான ICT தீர்வுகளை பெருநிறுவன உதவிநாடிகளுக்கு வழங்குவதற்கு மொபிடெல்லினால் உருவாக்கப்பட்ட பிரிவான Mobitel Business Solutions (MBS) இனால் இந்த SAGT தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
0711 717171 என்ற தொலைNபுசி இலக்கத்தில் அல்லது mbs@mobitel.lkஎன்ற மின்னஞ்சலில் MBSஇனை தொடர்பு கொள்ளமுடியும்.