கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (15) வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக் கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலையின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட கலந்து கொண்டதோடு பல்கலைக் கழக உபவேந்தர்இவிரிவுரையாளர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இப்பட்டமளிப்பின் போது கலை கலாச்சார பீடம், விவசாய பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், விஞ்ஞான பீடம், வணிக முகாமைத்துவ பீடம், திருமலை வளாக தொடர்பாடல் மற்றும் வியாபாரக் கற்கைகள் பீடம், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஆகிய கல்விப் பீடங்களின் பொது சிறப்பு பட்டப் பரீட்சைகளிலும் பட்டப்பின் படிப்பு கற்கை நெறிகளிலும் சித்தியடைந்த உள்வாரி மற்றும் வெளிவாரியான 927 மாணவர்கள்  பட்டமளிப்பு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *