ஜனாதிபதித் தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவாக தேரர்கள் களத்தில்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளிவராவிட்டாலும்கூட குறித்த தேர்தல்மீது பிரதான அரசியல் கட்சிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

2020 ஜனவரிவரை காலஅவகாசம் இருக்கின்றபோதிலும் அதற்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என அரசியல் களத்தில் பலகோணங்களில் கதைகள் அடிபடுகின்றன.

எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில் தமது அணியே வெற்றிபெரும் என மஹிந்த அணி மார்தட்டினாலும்,  தமது தரப்பிலிருந்து யாரை வேட்பாளராக களமிறக்குவது என்பதில் குழம்பிபோயுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச,பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, தினேஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேன ஆகிய ஐந்து பெயரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பம் வெளியிட்டுள்ளனர்.

இதனால், மஹிந்த அணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனதான் போட்டியிட வேண்டும் என சுதந்திரக்கட்சி அழுத்தம் கொடுத்துவருவதானது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சினம்கொள்ள வைத்துள்ளது.

இந்நிலையில் மஹிந்த – மைத்திரி கூட்டணிக்குள் மோதல் ஏற்படாமல் இருப்பதற்கும், மஹிந்தவின் ஆசியுடன் கோட்டாபய ராஜபக்சவை களமிறக்க வைக்கவும் பௌத்த தேரர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து, கோட்டாபய ராஜபக்ச களமிறங்கவேண்டியேதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துவருகின்றனர்.

கோட்டாபய ராஜபக்சவின் எலிய அமைப்புக்கு சார்பாக செயற்படும் பௌத்த தேரர்களே ‘நால்வரை’ சமரசப்பேச்சு ஊடாக வெட்டிவிட்டு, கோட்டாவை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேரர்களின் ஆலோசனையின் பிரகாரமே அமெரிக்க குடியுரிமையை கைவிடும் ஆவணங்களை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகத்தில் கோட்டாபய ராஜபக்ச கையளித்துள்ளார் என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *