பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கிய அரபு நாடு!

துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்படியொரு நடவடிக்கையை புரட்சிகரமான மாற்றமாக கருதப்படுகிறது. இந்த முடிவு UAE சட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.

மருத்துவப் பொறுப்புச் சட்டம் தொடர்பான 2024-இன் அமைச்சரவைத் தீர்மானம் (44) விதிமுறைகளுக்கு உட்பட்டு கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது என்று கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்தது ஒரு வருடமாவது இருப்பவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

இச்சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அல்லது அவளது அனுமதியின்றி உடலுறவின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டாலோ அல்லது பெண்ணின் உறவினர்களில் ஒருவர் அதற்கு பொறுப்பாக இருந்தாலோ கருக்கலைப்பு அனுமதிக்கப்படும்.

துஷ்பிரயோகம் நடந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அரசு வழக்கறிஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். கருக்கலைப்பு நிகழும்போது, ​​​​கரு 120 நாட்களுக்குள் வளர்ந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.

கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் மற்றும் மருத்துவ சிக்கல்கள் இல்லாமல் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *