இலங்கையில் தொடர்ந்தும் குறைந்துவரும் பிறப்பு எண்ணிக்கை

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 100,000 இற்கும் அதிகமான பிறப்புகள் குறைவடைந்துள்ளதாக மகளீர் மற்றும் மகப்பேறியல் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமானளவு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், முதியோர் சமூகம் அதிகரிப்பதன் மூலமும், இளம் சமூகம் குறைவதன் மூலமும் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு இந்த நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து இருபத்தைந்தாயிரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 47 ஆயிர்மாக குறைவடைந்துள்ளது.

இதேநேரம் 2017 ஆம் ஆண்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரமாக காணப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கடந்த 5 வருடங்களாக மகளீர் மற்றும் மகப்பேறியல் வைத்தியர்களினால் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, எதிர்காலத்தில் நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் மகளிர் மற்றும் மகப்பமற்று வைத்தியர் சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *