கொரோனாவால் கொழும்பு தாமரை கோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்

கொரோனா வைரஸ் இலங்கையினுள் பரவுவதைத் தவிர்ப்பதற்கு தமது உயிரைப் பணயம் வைத்து இரவு பகல் பாராது முன்னின்று செயற்பட்டுவரும் அனைவருக்கும் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் இன்று மாலை 6.45 மணிக்கு தாமரைக் கோபுரம் ஒளியூட்டப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.

“சவாலான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் தைரியத்தை ஏற்படுத்தி, முழு உலகுக்கும் முன்னுதாரணமாக மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினர், அரச நிர்வாக பொறிமுறைக்குட்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பல ஊழியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அனைவருக்கும் மக்களினதும் நாட்டினதும் கௌரவம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது” என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *