கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் உடலுறவு வைத்து கொள்வார்களா?

 

கிரிக்கெட் வீரர்கள் செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் அளித்திருக்கும் பதில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அபிஷேக் நாயர் அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் அபிஷேக் நாயர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல்வேறு தரப்பு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று கிரிக்கெட் வீரர்கள் தொடரின் போது செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அபிஷேக் நாயர், இந்த கேள்வியை நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் கேட்கிறீர்களா? இல்லை எதிர்மறையான எண்ணத்தில் கேட்கிறீர்களா? ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் வெளிப்படையானது. செக்ஸ் இல்லாமல் எப்படி மனிதர்களால் உயிர் வாழ முடியும்? செக்ஸ் நல்லதா? கெட்டதா? என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா.

இல்லை கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் எத்தனை முறை ஈடுபடுவார்கள் என கேட்கிறீர்களா? என்னைப் பொருத்தவரை செக்ஸ் என்பது ஒரு சாதாரண விஷயம் தான். அது வீரருக்கு வீரர் மாறுபடும். எப்போதுமே ஒவ்வொரு வீரர்களும் களத்தில் கடுமையாக போராடுகிறார்கள். அவர்களுடைய மனதும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும்.

இந்த சூழ்நிலையில் சிலர் செக்ஸில் ஈடுபடுவார்கள். சிலர் அந்தப் பக்கமே செல்ல மாட்டார்கள். சில கிரிக்கெட்டர்கள் செக்ஸில் ஈடுபடாத போது தான் கவனத்துடன் செயல்பட முடியும் என்று நினைப்பார்கள். சிலர் செக்ஸில் ஈடுபடும் போது தங்களுக்கான நெருக்கடிகள் குறையும் என்று நினைப்பார்கள். எனவே இது தனிப்பட்ட வீரர்களை பொறுத்து தான் மாறுபடும்.

இதற்கென தனி சட்ட விதிகள் எல்லாம் கிடையாது.ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு முறையில் வாழ்க்கை முறை வேறுபடும். ஆனால் யாருமே செக்ஸ் வேண்டும் என்று அலைய மாட்டார்கள். சிலருக்கு நெருக்கடிகள் அதிகமாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *