மனிதர்கள் மரணத்தை தாண்டி வாழ முடியுமாம்?

சீன விஞ்ஞானிகள் மனித பரிணாம வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக மூளை உறைதலை நீட்டிக்கும் கண்டுப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இது மனிதர்களின் ஆயுட் காலத்தை நீட்டிக்க வழிசெய்யும் என்று கூறப்படுகிறது.

அதாவது சமீபத்திய பரிசோதனையில்  மனித கரு ஸ்டெம் செல்களை 03 வாரங்களுக்கு மேலதிகமாக வளர்த்துள்ளனர். இது நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் செயல்படுவதற்கு போதுமான காலமாகும்.

இந்த மாதிரிகள் பின்னர் சர்க்கரை, உறைதல் தடுப்பு மற்றும் இரசாயன கரைப்பான்கள் போன்ற பல்வேறு இரசாயன கலவைகளில் ஊறவைக்கப்பட்டுள்ளது.

அவற்றை 24 மணிநேரம் திரவ நைட்ரஜனில் கிரையோஜெனிக் முறையில் உறைய வைத்த பிறகு, மீளவும் எடுத்து கரைத்துள்ளனர்.

இதன்போது  கலவைகளில் ஒரு செல்  நியூரான்களை அப்படியே வைத்திருப்பதையும் சாதாரணமாக சமிக்ஞைகளை அனுப்புவதையும் கண்டறிந்துள்ளனர்.

கிரையோஜெனிக்ஸின் போட்டி மற்றும் வளரும் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க புதிய மாற்றத்தை கொண்டுவரும் எனக் கூறப்படுகிறது.

இந்த கண்டுப்பிடிப்பானது மனிதர்கள் உயிரிழந்தபிறகு அவர்களது மூளையில் செயற்கை முறையில் உயிரோட்டத்தை கொடுப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் வாழ முடியும் என்பதை குறிக்கிறது.

முன்னதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள். தொழிலதிபர்கள் தாங்கள் இறந்த பிறகு தங்களது உடலை உறைய வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது.

அமெரிக்க டி.ஜே. ஸ்டீவ் அயோகி, ஃபேமிலி கையை உருவாக்கியவர் சேத் மக்ஃபர்லேன் மற்றும் பேபால் நிறுவனர் பீட்டர் தியேல் போன்ற பல பிரபலங்கள் தங்கள் உடலை உறையவைக்க முன்பதிவு செய்துள்ளனர்.

சீன விஞ்ஞானிகளின் இந்த முயற்சி வெற்றிபெற்றால் மனிதர்கள் மரணத்தை தாண்டி வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *