புத்தாக்கத்தின் ஊடாக மக்களை நவீன உலகத்துக்கேற்ற புதிய சிந்தனையுடன் கூடிய ஆட்களாக மாற்றுவதே IIHS நிறுவனத்தின் நோக்கமாகும்

IIHS நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி/ ஸ்தாபகர்/ கற்கை பணிப்பாளர் சிறப்பு மருத்துவ
நிபுணர் டாக்டர் கித்சிறி எதிரிசிங்க
இலங்கையில் சுகாதாரக் கல்வியின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS)
2001 ஆம் ஆண்டில் American College of Health Sciences (ACHS) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இக்
கல்வி நிறுவனமானது, உலகில் எப்பகுதியிலும் சேவையாற்றக்கூடிய தாதியர்களை பயிற்றுவிக்கும்
தனித்துவமான நோக்கத்துக்காக நிறுவப்பட்டது. அமெரிக்காவில் நீண்ட காலமாக அவசர மருத்துவச்
சிகிச்சைகளை மேற்கொண்ட டாக்டர் லெனார்ட் ரணசிங்கவினாலலே ACHS பெயர் சூட்டப்பட்டது. ACHS
தாதியர் பாடநெறிகள் கலிபோர்னியாவின் Pacific Union College (PUC) ஐ அடிப்படையாக கொண்டவை
ஆகும்.

அமெரிக்காவில் அவசர மருத்துவச் சிகிச்சைகளை அளிக்கும் போது பெற்ற அனுபவங்ளின்
அடிப்படையில் டாக்டர் லெனார்ட் ரணசிங்கவும் பேராசிரியர் நிஹால் டீ சில்வாவும் உலகெங்கிலும்
நிலவும் தாதியர்களுக்கான தட்டுப்பாடு மற்றும் உலகெங்கிலும் தகைமை பெற்ற தாதியர்களுக்குள்ள
வாய்ப்புகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தியிருந்தார்கள்.

அந்தவகையில் IIHS நிறுவனத்தை
உருவாக்குவதில் மேற்குறிப்பிட்ட டாக்டர் லெனார்ட் ரணசிங்கவும் பேராசிரியர் நிஹால் டீ சில்வா முக்கிய
பங்காற்றியுள்ளார்கள்.
IIHS நிறுவனம் சுகாதாரக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பாக 22ஆண்டு கால
வரலாற்றை கொண்டுள்ள புகழ்மிக்கதொரு நிறுவனமாகும். இலங்கை உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தின்
தாதியர் மற்றும் அது சார்ந்த சுகாதாரக் கல்வித் துறைக்கு இந் நிறுவனம் மகத்தான பங்களிப்பினை வழங்கி
வருகிறது.

சுகாதாரச் சேவை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேம்பட்ட அங்கீகாரத்தை
பெறுவதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தல், நிலைத்தன்மை, புத்தாக்கம், உலகெங்கிலுமுள்ள பங்குதாரர்
தரப்புகளின் அறிவு மற்றும் சிறந்த பயன்பாடு சார்ந்ததான தொழில் வல்லுனர்களின் ஆளுமை,
தொழில்முறை, திறன் மற்றும் மனித நேயத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் IIHS நிறுவனத்தின் நோக்கங்களாகும்.

IIHS நிறுவனத்தில்
கல்வி கற்கும் மாணவர்கள் மூலம் சாதகமான மற்றும் ஆக்கப்பூர்வமான சமூகமொன்றை
உருவாக்குவதற்கும், இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் மரியாதை, முயற்சி, சேவைக்கான
அர்ப்பணிப்பு, நேர்மறை சிந்தனை, உயர் திறன், ஆக்கத்திறன் மற்றும் குழு உணர்வு போன்ற பண்புகளை
வளர்ப்பதற்கும் IIHS நிறுவனம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

புத்தாக்கத்தின் ஊடாக
மக்களை நவீன உலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை புதிய கோணத்தில் சிந்திப்பவர்களாக
மாற்றுவதே IIHS நிறுவனத்தின் நோக்கு ஆகும்.
IIHS நிறுவனம் மாணவர்களுக்கு அடிப்படை மட்டத்திலிருந்து டிப்ளோமா, பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு
மற்றும் கலாநிதி பட்டப்படிப்பு (Foundation, Diploma, Bachelor, Masters and PhD) வரை உயர் கல்வி
வசதிகளை வழங்குகிறது. தாதியர் சேவை (Nursing), உயிர் மருத்துவவியல் (Biomedical Science), இயன்
மருத்துவம் (Physiotherapy), சுகாதார நிர்வாகம் (Health Administration), IELTS, OET, PTE, கல்வி மற்றும்
கற்பித்தல் (Education & Teaching) ஆகிய துறைகளுக்கான பரந்துபட்ட பாடநெறிகளை IIHS நிறுவனத்தில்
கற்க முடியும். I

IHS நிறுவனம் கொவென்ட்ரீ பல்கலைக்கழகம் (Coventry University), டீக்கீன் பல்கலைக்கழகம்
(Deakin University), ஆபர்தீன் பல்கலைக்கழகம் (Aberdeen University), பின்லாந்து நாட்டின்
மெட்ரோபொலியா பல்கலைக்கழகம் (Metropolia University Finland), ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் (James
Cook University) ஆகிய பல்கலைக்கழகங்களுடன் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

சகல
மாணவர்களுக்கும் வாய்ப்பளித்தல், பிராந்திய மாணவர்களுக்கு சர்வதேச கல்வியை பெறுவதற்கான
பிரவேசம், சகல கல்வி பாடநெறிகளையும் நியாயமான கட்டணங்களில் வழங்குதல், இளம் சந்ததியினரை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கீகாரத்தை பெற்ற சிற்ப்பான தொழில் வல்லுநர்களாக மாற்றுதல்,
சர்வதேச தரத்துடனான உயர் பெறுமதிமிக்க கல்விச் செயன்முறைகளை பின்பற்றுதல், கல்விக்கு புதிய
போக்குகளையும் புதிய தொழில்நுட்பத்தையும் சேர்ப்பதன் மூலம் புத்தாக்கத்துக்கு ஆற்றுப்படுத்தல்,

மாணவர்களை பொருத்தமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் IIHS நிறுவனத்தின்
தனித்துவமான அம்சங்களாகும்.
IIHS நிறுவனத்தில் கல்வி கற்க வரும் சகல மாணவர்களுக்கும் “சகல கட்டங்களிலும் நாம் உங்களுக்காக
இருக்கின்றோம்” எனும் எண்ணக்கருவை உறுதிப்படுத்துவதற்கு IIHS நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் மூலம் IIHS நிறுவனத்தில் கல்வி கற்பதற்கு வரும் மாணவர்கள் மத்தியில் மேற்படி நிறுவனம் மீது
நம்பிக்கைமிக்க பிணைப்பொன்று ஏற்படும். மாணவர்கள் கற்கை நெறிகளில் சேரும் நாள் தொடக்கம்
பட்டப்படிப்பை நிறைவு செய்யும் நாள் வரைக்கும் அவர்களுக்கு உதவுவதற்கு பல்வேறு உதவி மற்றும்
அபிவிருத்தி சேவைகளை IIHS நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் மாணவர்களை
அழைத்துச் செல்லல் (தேவையேற்படின்), புதிய சேர்க்கை செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல்,
பல்கலைக்கழக சுற்றுலாப் பயணங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லல், மாணவர் உதவியாளர்
குழுவினர் புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்றல், புதிய மாணவர்களை பாதுகாத்து அவர்களுக்குள்
மேம்பட்ட நம்பிக்கையினை கட்டியெழுப்புதல் ஆகிய நடவடிக்கைகள் மாணவர் உதவியாளர் குழுவினால்
மேற்கொள்ளப்படுகின்றன. கலாசார ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக இலங்கையர் கலாசாரம்,
பழக்க வழக்கங்கள் மற்றும் IIHS நிறுவனத்தின் மாணவராக இருத்தல் தொடர்பாக மாணவர்களுக்கு
விழிப்புணர்வூட்டப்படும். I

IHS நிறுவனம் வழங்கும் சிரேஷ்ட மாணவ “நண்பர்” ஒருவரிடம் புதிய சர்வதேச
மாணவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்படுவார்கள். மாணவர் உதவியாளர் குழு எப்பொழுதும் IIHS
நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதோடு,
பல்கலைக்கழக வாழ்க்கையின் சகல பிரிவுகள், மாணவர் வீசா, சிறந்த இருப்பு, கற்கை செயலாற்றுகை,
பரீட்சைகளுக்கு தயாராவதற்கு தேவையான தகவல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் ஒத்துழைப்பு
அளிக்கப்படும்.
IIHS நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களை தொடர்ந்தும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும்
வைத்திருப்பதற்கு நிர்வாகம் தன்னை அர்ப்பணித்துள்ளது. I

IHS நிறுவனத்தில் கல்வி கற்கும் சகல
மாணவர்களும் உற்சாகமாகவும் மன உளைச்சலின்றியும் தமது கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றார்கள். IIHS நிறுவனத்தின் மாணவர்கள் ஒன்றிணைந்து குழுவாக பாடல் இயற்றுதல்,
பாடல்களுக்கு இசையமைத்தல், திரைப்பட இயக்கம் போன்ற கலைப் படைப்புகளிலும் ஆர்வங்
கொண்டுள்ளார்கள். IIHS நிறுவனத்தின் கற்கை செயன்முறையின் தனித்துவம் யாதெனில்,
குறிப்பிட்டதொரு மாணவருக்கு பாடத்தின் ஒரு பகுதியை கற்பதில் சிரமம் இருப்பின் சிரேஷ்ட
மாணவரொருவின் உதவியை பெறக்கூடியதாக இருக்கின்றமை ஆகும். தம்மால் கற்பதற்கு கடினமாக
உள்ள பகுதிகளுக்கு தனி நபர் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பிரவேசிக்க முடிவதோடு சம வயது கற்பித்தல்
உறுதுணை செயன்முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள்
மூலம் மாணவர்களுக்கிடையே பரஸ்பர நல்லுறவு மேம்படும். மாணவர்களின் பேச்சாற்றல், தலைமைத்துவ
பண்பு மற்றும் மேலும் பல விடயங்களை மேம்படுத்துவதற்கு IIHS நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான நிகழ்ச்சிகள் ஊடாக மாணவர்களின் ஒற்றுமை மற்றும் குழு உணர்வு மேம்படுவதோடு
முன்மாதிரியான நபரொருவரை சமூகத்துக்கு அளிப்பதை நோக்கமாக கொண்டு IIHS நிறுவனம் செயற்பட்டு
வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *