உளவியல்,ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை  சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு பாடநெறிகள் IIHS நிறுவனத்தினால் அறிமுகம்

 


இலங்கையின் முன்னணி சுகாதார கற்கை நிறுவனமான International Institute of Health Sciences (IIHS)உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உளவியல் விஞ்ஞான கௌரவமாணி பட்டம்இ நீதிமன்ற உளவியல் தொடர்பான
விஞ்ஞான கௌரவமாணி பட்டம் மற்றும் விளையாட்டு மற்றும் உடற்கல்வி உளவியல் தொடர்பானவிஞ்ஞான கௌரவமாணி ஆகிய பட்டப்படிப்பு பாடநெறிகள்  IIHS   நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய
பாடநெறிகளில் அடங்கும்.

சுகாதாரக் கற்கைகள் துறையில் ஏற்படக்கூடிய தொடர்இற்றைப்படுத்தல்களுக்கமைய இவ்வாறான புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம்தெற்காசிய பிராந்தியத்தில் சுகாதாரக் கற்கை நிறுவனங்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னணியில் திகழ்வதற்கும்,

ஆற்றல் மிக்க தொழில் வல்லுநர்களை சுகாதாரத் துறைக்கு அளிப்பதற்கும் ஐஐர்ளு நிறுவனம்எதிர்பார்த்துள்ளது.
மாணவர்களுக்கு ஊட்டச்சத்துவியல் தொடர்பான பரந்தளவிலான அறிவை வழங்கும் நோக்கத்துடன்  IIHS நிறுவனம் ஊட்டச்சத்துவியல் தொடர்பான பாடநெறிகள் சிலவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டு ஊட்டச்சத்துவியல் மற்றும் அடிப்படை உணவு அறிவியல் தொடர்பான சான்றதழ்பாடநெறிகளும் அவற்றில் அடங்கும். துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு உயர்தொழில்நுட்பத்திலான விஞ்ஞான ஆய்வுக் கூட வசதிகள் மற்றும் சம்பவ கற்கைகள் போன்றஅம்சங்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற மேற்படி பாடநெறிகள் மூலம் செய்முறை அறிவை பெறுவதற்கானவாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கின்றது.

இணை சுகாதாரவியல் தொடர்பான விஞ்ஞான கௌரவமாணிபட்டப்படிப்பு பாடநெறியொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ள  IIHS   நிறுவனம் அதன் ஊடாக அறிவும் அனுபவமும் கொண்ட சுகாதார வல்லுநர்களை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றது. தர்க்க ரீதியான சிந்தனை, துரித முடிவெடுத்தல் மற்றும் பயன்மிக்க தொடர்பாடல் போன்ற பண்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும் மேற்படி பாடநெறிகள் சுகாதாரத் துறைக்கு சாதகமான தாக்கத்தை
ஏற்படுத்துவதாக உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த IIHS   நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுஅதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்க மேற்படி கற்கை பாடநெறிகள் ஊடாக பல்வேறு
பிரிவுகளின் கீழ் மானிடப் பண்புகள் உளச் செயற்பாடு மற்றும் உணர்வுகள் தொடர்பான பரந்துபட்டபுரிதல் வழங்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இணைந்துஅளிக்கப்படும் மேற்படி கற்கை பாடநெறிகள் ஊடாக மாணவர்களை கோட்பாட்டு ரீதியாகவும்
சிகிச்சைக்கூடம் சார்ந்ததாகவும் வலுப்படுத்த முடியும். சுகாதாரத் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் இத் தருணத்தில்  IIHS  நிறுவனத்துடன் இணையுமாறு ஆர்வமுடைய
அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *