Local

இலங்கை தம்பதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள வீடு ஒன்றில் வயதான தம்பதியினரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இருவரும் இலங்கை பூர்வீம் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் ஆகிய இருவரை விக்டோரியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த தம்பதியினர் நேற்று காலை மெல்போர்னின் வடகிழக்கில் உள்ள அவர்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading