Cinema

மீண்டும் உயிருடன் வந்த நடிகை

பொலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பொலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர், “லவ் இஸ் பாய்சன்” எனும் கன்னட படத்திலும், “மாலினி அண்ட் கோ” எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இவர் ‘பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நடிகை பூனம் பாண்டே கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது.

இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இன்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும், அதில், நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.”,

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading