புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சூர்யா – கார்த்தி!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நிதி உதவி வழங்குவதற்காக அறிவித்துள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி
கடந்த நாட்களில் விடாமல் பெய்த மழையின் காரணமாகவும் மிக்ஜாம் புயல் காரணமாகவும் வெள்ளம் ஏற்பட்டு பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயலானது 14 கி.மீ வேகத்தில் ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கவிருகிறது.
இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தினால் மூடப்பட்டு மின்சாரம் தடைசெய்யப்பட்டு பொது மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அனர்தத்தின் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி செய்வதற்காக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி முன்வந்துள்ளனர்.
மேலும் இவர்களுடைய ரசிகர் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கவுள்ளனர்.
இந்த செயலானது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.