நீருக்கடியில் 38 வித Magic show – உலக சாதனை படைத்த 13 வயது சிறுமி !

 

ஸ்கூபா டைவிங் என்பது ஆழ்கடலில் மூழ்கி, கடலில் உள்ள அதிசயங்களைக் காண்பதாகும்.

மேஜிக் என்பது மேடையிலேயே நம் கண் முன்னே அதிசயங்களை செய்து காட்டுவதாகும்.

இவை இரண்டையும் ஒரே நேரத்தில், ஒரே செயலாகச் செய்து 13 வயது அமெரிக்க சிறுமி உலக சாதனை படைத்ததுதான் தற்போதைய வைரலாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த 13 வயதான ஏவரி எமர்சன் ஃபிஷர். இவர், நீருக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்தபடியே, 3 நிமிடத்தில் 38 மேஜிக் வித்தைகளைச் செய்து காட்டிய வீடியோவை கின்னஸ் உலக சாதனையாளர்கள் அமைப்பு தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கின்னஸ் அமைப்பானது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ, பகிரப்பட்ட 14 மணி நேரத்தில் 1.3 இலட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.

நீருக்கடியில், ஸ்கூபா டைவிங் உடையில் அந்த சிறுமி செய்த ஆச்சரியப்படத்தக்க மேஜிக் வீடியோ மக்களை மிகவும் கவர்ந்து வைரலாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *