Rupavahini SLBC பொது நிறுவனங்களாக மாற்றப்படும்!

 

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை என வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதலான புள்ளி விபரங்களை முன்வைத்து, இந்த அலைவரிசைகள் எவ்வாறு நட்டம் அடைந்துள்ளன என்பதை குழுவின் தலைவர் தௌிவுபடுத்தியுள்ளார்.

இதற்கமைய, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டு 277 மில்லியன் ரூபா நட்டத்தையும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டில் 457 மில்லியன் ரூபா நட்டத்தையும் அடைந்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த அலைவரிசைகளுக்கு திறைசேரியிலிருந்து மேலும் நிதியை வழங்குவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றை பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இதற்கமைய, இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *