மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட சவால்
வெட்கப்படக் கூடிய விடயம் இருந்தால் மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.
மத்தேகொட பிரதேசத்தில் அக்கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு பிரதிவாதிகளாக உச்ச நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள ராஜபக்சக்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றங்களில் நஷ்டஈடு கோருவதற்கு மக்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருந்து கிடைக்காமல் இறந்தவர்களின் உறவினர்கள், எரிவாயு வரிசையில் இறந்தவர்களின் உறவினர்கள், எரிவாயு வெடித்து இறந்தவர்களின் உறவினர்கள், எரிபொருள் வரிசையில் இறந்தவர்களின் உறவினர்கள் இதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்றார்.
பொருளாதாரக் குற்றவாளிகள் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதாகவும், எரிபொருள் வரிசையை உருவாக்கிய குற்றவாளிகளும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியவர்கள் குறித்து அடுத்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.