வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை விருந்தாக்கும் கணவர்கள்!

 

நமிபியா நாட்டில் உள்ள ஒரு பழங்குடியின கிராமத்தில், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை கணவர்களே விருந்தாக்கும் பாரம்பரியம் உள்ளது.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும், அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் உணவோடு சேர்த்து மனைவியையும் விருந்தளிக்கும் கிராமத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். உலகில் எங்கு பார்த்தாலும் உயரமான கட்டடங்களும், பல வித அறிவியல் முன்னேற்றங்களும் பார்க்க முடிகிறது.

ஆனால், பழங்குடியினர் சிலர் கற்காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதை போலவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய விதிகளையும், பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் மாற்றாமல் இன்னும் கடைபிடித்து வருகின்றனர்.

அந்தவகையில், நமிபியா நாட்டில் ஹிம்பா பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் சில இன்னும் மாறாமல் உள்ளது. இங்கு, 50,OOO பழங்குடியினர் உள்ளனர். இங்கு, உலகம் எவ்வளவு தான் முன்னேற்றம் அடைந்தாலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த ஹிம்பா பழங்குடியின மக்களின் விதிகள் விசித்திரமாக உள்ளது. இவர்கள், உணவை தேடி நாள் முழுவதையும் செலவழிக்கின்றனர். மேலும், இவர்களுக்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகைப் போட்டுக் குளிப்பார்கள். இதனை புகை குளியல் என்று கூறுவார்கள்.

இது தவிர வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு, அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் உணவோடு சேர்த்து மனைவியையும் கணவர் விருந்தளிக்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு, வீட்டில் தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலானது டாக்குமெண்டரியில் வெளியான அடிப்படையில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *