காசாவில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொலை! உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

காசாவில் ஒவ்வொரு 10 நிடங்களுக்கும் ஒரு குழந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவினால் கொல்லப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் Tedros Adhanom Ghebreyesus ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான மோதல் நடவடிக்கை 36 ஆவது நாளாக தொடர்கின்றது.

இந்த மோதல் காரணமாக இரு தரப்பிலும் இதுவரை 12,400 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, காசா பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேல் தாக்கிவருகிறது.

அத்துடன், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதும் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த பின்னணியில் காசா பகுதியில் உள்ள அல் ஷிஃபா (al hisbah) வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் கடுமையான மோதல் நடந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் காசாவில் உள்ள வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களினால் நிரம்பியுள்ளதுடன், குறைந்த அளவிலான வசதிகள் காணப்படுவதால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதியில் 50,000 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் காயமார்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், காசாவில் உள்ள al quds வைத்தியசாலையில் மின்சார வசதி இன்றி டோர்ச் வெளிச்சத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *