நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம்! காதலரை கரம் பிடித்தார்
தமிழ்ப்பட நடிகை அமலா பால் தனது காதலர் ஜகத் தேசாயினை திருமணம் செய்துள்ளார்.
மைனா, தெய்வத்திருமகள் படங்கள் மூலம் பிரபலமான நடிகை அமலா பால், இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இவர்களது இல்லற வாழ்க்கை மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. 2017ஆம் ஆண்டில் கணவரை பிரிந்த அமலா பால் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார்.
சமீபத்தில் அமலா பாலின் பிறந்தநாள் அன்று அவரது காதலர் ஜகத் தேசாய் Propose செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் அமலா பால் – ஜகத் தேசாய் திருமணம் நடந்துள்ளது. இதனை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அமலா பால் பகிர்ந்துள்ளார்.
திருமண ஜோடிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.