12000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைடைவிங் செய்த 90s புகழ் நடிகை
90s புகழ் நடிகை மதுபாலா நியூசிலாந்தில் ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.
தமிழில் ரோஜா படங்கள் பார்த்தவர்கள் நடிகை மதுபாலாவை மறக்க மாட்டார்கள். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தன் திறமையை வெளிப்படுத்திய நடிகை தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.
அவரது வயது 54. அந்த வயதில் உயரமான இடங்களை ஏற பெருபாலானோர் நினைக்கமாட்டார்கள். ஆனால், நடிகை மதுபாலா 12,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நவம்பர் 1-ஆம் திகதி, மதுபாலா நியூசிலாந்தின் டவுபோவில் உள்ள ஸ்கை ஹை கிளப்பில் 12,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவ் செய்தார். சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உண்மையில், மதுபாலாவுக்கு உயரமான இடங்கள் என்றால் மிகவும் பயம். அந்த பயத்தை சிறிது நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார் மதுபாலா. ஆனால் அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து துள்ளிக் குதித்ததாக மதுபாலா தெரிவித்துள்ளார்.
இவ்வளவு உயரத்தில் இருந்து கீழே உள்ள பிரம்மாண்டமான மேகங்கள், மலைகள், நெருப்பு மலைகள், கடல் போன்றவற்றைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். சிலர் பயத்தின் காரணமாக வாழ்க்கையில் சில சுகங்களை இழக்கிறார்கள். பயத்தை விட்டுவிட்டு மதுபாலாவைப் போல வயது வித்தியாசம் இல்லாமல் புது அனுபவத்தைப் பெறலாம். மதுபாலாவின் இந்த சாதனை தற்போது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.