Features

WhatsAppஇல் இனி உணர்வுகளை சித்திரமாக வெளிப்படுத்தலாம்!

 

WhatsApp செயலியில் உரையாடும்போது உணர்வுகளை வெளிப்படுத்த இனி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) கைகொடுக்கவிருக்கிறது.

வார்த்தைகளுடன் இணைந்து எந்த ’emoji’ சின்னம் அல்லது stickerஐப் (மின்-ஒட்டுவில்லை) பயன்படுத்தினால் சரியாக வரும் என்று நம்மில் பலர் யோசிப்போம்…

விருப்பத்திற்கு ஏற்ற மின்-ஒட்டுவில்லைகளை இனி செயற்கை நுண்ணறிவு அம்சம் உருவாக்கிக் கொடுத்துவிடும்.

எதைச் சித்திரமாகப் பார்க்கவிரும்புகிறீர்கள் என்று குறிப்பிட்டால் போதும்.

– WhatsApp-இல் மின்-ஒட்டுவில்லைகள் இருக்கும் smiley emojiக்குச் செல்லவேண்டும்

– ‘create’ அதாவது உருவாக்கு எனும் பொத்தானை அழுத்தவேண்டும்.

– உதாரணத்துக்குப் ‘சிரிக்கும் பூனை’…’டுரியான் சாப்பிடும் பிரமுகம்’ என்று தேடினால் மின்-ஒட்டுவில்லைகள் உருவாக்கப்படும்.

WhatsApp செயலியின் புதிய பதிப்பில் அந்த அம்சத்தைப் பயன்படுத்தமுடியும்.

WhatsAppஐ நிர்வகிக்கும் Meta நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை உருவாக்கியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading