தமிழக முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தினமும் கலந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில், நேற்று மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / m k stalin

கடந்த சில நாள்களாகவே மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், நேற்று தலைமைச் செயலகத்தில் கலந்து கொள்ளவிருந்த இரண்டு நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அதே போல, பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனக் கூறியிருந்த நிலையில் அதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / m k stalin

இது குறித்து மெட்ராஸ் ENT ஆராய்ச்சி தலைமை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், விரைவில் நலம் பெற வேண்டும் என திமுகவினர் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *