புகழ்பெற்ற நடிகரான மேத்யூ பெர்ரி மர்மமான முறையில் உயிரிழப்பு

“பிரண்ட்ஸ்” தொடரில் சாண்ட்லர் பிங்காக நடித்து மிகவும் பிரபலமான சிட்காம் நட்சத்திரமான மேத்யூ பெர்ரி தனது 54 ஆவது வயதில் உயிரிழந்ததாக லொஸ்ஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸில் பகுதியில் காணப்படும் அவரது வீட்டில் உள்ள ஹாட் டப் எனப்படும் நீர்தொட்டியில் மூழ்கி உயிரிழந்திருந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வரை எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான எதுவும் தென்படவில்லை. ஆனாலும் இவரது திடீர் மரணம் சந்தேகத்திற்கிடமானது என பொலிஸார் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் மரணம் குறித்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1969 இல் மாசசூசெட்ஸில் உள்ள வில்லியம்ஸ்டவுனில் பிறந்த பெர்ரி, நடிப்புத் துறையை தேடி15 வயதில் லொஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றார்.

1994 மற்றும் 2004 க்கு இடையில் NBC இல் 10 சீசன்களுக்கு ஓடிய “நண்பர்கள்” தொடரில் அவர் நடித்து, சர்வதேச நட்சத்திரமாக உயர்ந்தார்.

இந்த பாத்திரம் 2002 இல் நகைச்சுவைத் தொடரில் சிறந்த முன்னணி நடிகருக்கான பிரைம் டைம் எம்மி பரிந்துரையைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிட்காம் வரலாற்றில் சிறந்த குழும நடிகர்களில் ஒன்றாக இருந்ததற்காக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து அவரை நினைவுகூரறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *