புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரங்களை கடுமையாக்கும் பிரித்தானியா

புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 50 ஹோட்டல்களைப் பயன்படுத்துவதை பிரித்தானிய அரசாங்கம் நிறுத்தும் என்று அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ரொ பர்ட் ஜென்ரிக் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அதிகாரிகள் தற்சமயம் சுமார் 400 ஹோட்டல்களைப் பயன்படுத்தி, முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள ஹோட்டல்களுடனான ஒப்பந்தங்கள் நிறுத்தப்படவுள்ளதாக ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.

புகலிட கோரிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் தமது அரசாங்கத்தின் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹோட்டல் ஒப்பந்தங்கள் மூலம் நாட்டு மக்களின் வரியில் இருந்து நாள் ஒன்றுக்கு எட்டு மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்றும், அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நிழல் குடியேற்ற மந்திரி ஸ்டீபன் கின்னாக், குடிவரவு அமைச்சர் ரொ பர்ட் ஜென்ரிக்கை விமர்சித்தார்.

தற்போது பயன்படுத்தப்படும் ஹோட்டல்களின் மொத்த எண்ணிக்கையில் 12 சதவீதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே, புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 50 ஹோட்டல்களைப் பயன்படுத்துவதை பிரித்தானிய அரசாங்கம் நிறுத்தும் என்று அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ரொ பர்ட் ஜென்ரிக் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 18 மாதங்கள் பாகிஸ்தானில், பிரித்தானியாவால் தங்க வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் அகதி, மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் மீள்குடியேற்றம் செய்யப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தலிபான்களால் ஆளப்படும் காபூலில் இருந்து தப்பிச் சென்ற முகமது ஜாக்கர் நசேரி, பிரித்தானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பிரித்தானிய விசா அங்கீகரிக்கப்பட்ட போதிலும், நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜாக்கர் நசேரி, ஆப்கானியர்களுக்கான பிரித்தானிய மீள்குடியேற்றத் திட்டத்திற்குத் தகுதியற்றவராகக் கருதப்பட்டார்.

இந்நிலையில், அவர் தங்குமிடத்தை விட்டு வெளியேற இரண்டு வாரங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இப்போது பாக்கிஸ்தானில் வீடற்ற நிலையை எதிர்கொள்கிறார்.

அவரது தங்குமிட உதவி “தவறாக” வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *