புடினுக்கு மாரடைப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டெலிகிராம் சேனலான ‘ஜெனரல் எஸ்விஆர்’ஐ மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தனது படுக்கையறை தரையில், உணவு மற்றும் பானங்களுடன் கவிழ்ந்த மேசையுடன் புடின் படுத்திருப்பதைக் அதிகாரிகள் கண்டுள்ளனர்.
“அநேகமாக, புடின் விழுந்தபோது, மேசை மற்றும் பாத்திரங்களை அடித்து தரையில் தள்ளியுள்ளார். இது சத்தத்தை ஏற்படுத்தியது.
புடின் கண்களை உருட்டிக்கொண்டு தரையில் படுத்துக்கொண்டிருந்தார்.
பணியில் இருந்த மற்றும் அருகிலுள்ள அறைகளில் இருந்த வைத்தியர்கள் உடனடியாக அழைக்கப்பட்டனர்” என்று ஜெனரல் எஸ்.வி.ஆர் இல் குறிப்பிடப்பட்டுள்ளதாக மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
புடின் உடனடியாக அவரது இல்லத்தில் உள்ள பிரத்தியேக அறைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு தீவிர சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு புடினுக்கு வைத்தியர்கள் புத்துயிர் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உதவி சரியான நேரத்தில் வழங்கப்பட்டது, இதனால் புடின் சுயநினைவு பெற்றார்,” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புடினின் உடல்நிலை மோசமடைந்தது பற்றிய கூற்றுக்களை கிரெம்ளினால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு பிறகு புடினுக்கு நெருக்கமான பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து திங்களன்று ஆலோசனை நடத்த புடின் ஒப்புக்கொண்டதாகவும்” மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, புடினின் உடல்நிலை மோசமடைந்ததாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
புடினுக்கு புற்றுநோயாக இருக்கலாம் அல்லது பார்கின்சன் நோயாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், புடின் “நல்ல ஆரோக்கியத்துடன்” இருக்கிறார் என்று கிரெம்ளின் பலமுறை மறுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.