டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி!

 

தாக்குதலுக்குள்ளானார் என்று தெரிவிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னைத் தாக்கினார் என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்றுப் பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து தன்னை சுஜித் பெரேரா எம்.பி. தாக்கினார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்துப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் அவர் பதிவு செய்தார். அதன்பின்னர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் நேற்று மாலை அவர் சேர்க்கப்பட்டார்.

அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்தால் நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகக்கத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *