வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான போரினால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹர்ஷாத் குறிப்பிட்டள்ளார்.

மேலும் அது தொடர்பில் அவர் கூறியதாவது, 400 பேர் வரை வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 120 இக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும், அவர்களை வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சட்டரீதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு 6000 பணியாளர்களே சென்றுள்ளாகவும் 8000 பேர் வரை சட்டவிரோதமாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Foreign Vacancies 2023 Sri Lanka

அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளை இலங்கை தூதரகம் ஊடாக முன்னெடுத்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *