ரொனால்டோ பலஸ்தீனதற்கு ஆதரவா?

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களை மீறி இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் முற்றுகைகளால் பாதிக்கப்படும் பலஸ்தீன குழந்தைகளுக்கு போர்த்துகல் கால்பந்து அணியின் நட்டசத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஆதரவை அறிவித்துள்ளார்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இந்த காணொளியை பகிர்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

“நீங்கள் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நான் ஒரு பிரபலமான வீரர் ஆனால் நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள். நம்பிக்கையை இழக்கக் கூடாது. உலகம் உங்களுடன் இருக்கிறது.

நான் உங்களுடன் இருக்கிறேன்’என காணொளியில் ரொனால்டோ கூறியுள்ளார்.

காஸா மற்றும் பலஸ்தீனத்தின் அப்பாவி குழந்தைகளுக்காக ரொனால்டோ பேசுகிறார் என்ற குறிப்புடன் பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

ரொனால்டோ உண்மையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவா?

இல்லை என்பதே யதார்த்தம். ரொனால்டோவின் பெயரில் பரவும் இந்த காணொளி உண்மையில் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அப்போது சிரியாவில் உள்நாட்டுப் போரின் போது பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கா அவர் பேசிய காணொளி தற்போது தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

கிறிஸ்டியானோ இந்த காணொளியை X (ட்விட்டர்) இல் ‘சிரியாவில் மோதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘ஒரு நம்பிக்கை செய்தி’ என்ற தலைப்புடன் பகிர்ந்திருந்தார்.

இந்த காணொளி ‘Save the Children of Syria’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பகிரப்பட்டது. ரொனால்டோவின் இந்த காணொளியை முன்னணி ஊடகங்களும் வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரான்ஸ் வீரர் கரீம் பென்சிமா, லிவர்பூலின் மொஹமட் சாலா மற்றும் மொராக்கோ நட்சத்திரம் ஹக்கீம் ஜியேக் ஆகியோர் பலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை அறிவிக்க முன் வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *