கிரிக்கெட் வீரர் தோனியுடன் இணைந்த விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியுடன் விளம்பர படம் ஒன்றுக்காக இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன், தோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், லைகா தயாரிப்பில் அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர படத்தினை எடுப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *