கலைத்துறை ஜாம்பவானின் பூதவுடல் இனிதே நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த பிரபல நடிகர் ஜாக்சன் அந்தனியின் பூதவுடல் இனிதே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த ஜாக்சன் அந்தனி எனும் மாபெரும் கலைஞரின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றன.

அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ராகம கடவத வீதியில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

இதேவேளை, மத தலைவர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் என ஏராளமானோர் ஜாக்சன் அந்தணியின் இல்லத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய அந்த இறுதி தருணத்தில் எதிர்பார்க்க முடியாத அளவிலான மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தனர்.

அதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இராகமை புனித Peter And Paul தேவாலயத்தில் அவரது இறுதி கிரியைகளுக்கான மத வழிபாடுகள் ஆரம்பமாகின.

இலங்கை கலைத்துறையில் நிரப்ப முடியாத ஒரு இடைவெளியை வைத்து விட்டு அவர் கடந்த 9ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *