இலங்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 344 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் Kusal Mendis 122 ஓட்டங்களையும் Sadeera Samarawickrama 108 ஓட்டங்களையும் Pathum Nissanka 51ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Hasan Ali 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய பாகிஸ்தான் அணிக்கு 345 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *