விமான குண்டு வீச்சால் வீடுகள் அதிர்க்கின்றன-காசாவில் வசிக்கும் இலங்கை பெண்ணின் அனுபவம்

இஸ்ரேல் மற்றும் ஹாமஸ் இடையில் ஏற்பட்ட போர் காரணமாக தானும் தனது குடும்பத்தில் உள்ளவர்களும் அச்சத்திலும் மிகவும் கஷ்டத்திலும் இருப்பதாக காசாவில் வசிக்கும் இலங்கை பெண்ணான பாத்திமா றிகாஷா தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் காசாவில் இலங்கையர்களும் வசித்து வருவதாக தெரியவருகிறது.

கொழும்பு தெமட்டகொடையை சேர்நத 42 வயதான பாத்திமா றிகாஷா 5 வருடங்களுக்கு முன்னர் தனது பிள்ளைகளுடன் பாலஸ்தீனத்தின் காசாவிற்கு சென்று குடியேறியுள்ளார். அவரது கணவர் முஹம்மத் றிஸ்கி.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாத்திமா றிகாஷா, “இலங்கையில் எனது வீடு கொழும்பு தெமட்டகொடையில் உள்ளது.

இலங்கையிலேயே எனது மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இளைய மகன் பாலஸ்தீனத்தில் பிறந்தார். நான் இலங்கையில் இருந்து வந்து ஐந்து வருடங்களாகின்றது”. எனக்கூறியுள்ளார்.

மேலும் துப்பாக்கி, விமான குண்டு வீச்சு சத்தங்களுக்கு மத்தியில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பாத்திமா றிகாஷா தனது அனுபவத்தை விபரித்துள்ளார்.

“நேற்று முன்தினம் முதல் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர். இதனால், நான், எனது கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டுக்குள் இருந்து வருகின்றோம். எமக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

எமக்கு குடிநீர் மற்றும் உணவை பெற்றுக்கொள்வதில் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.விமான குண்டு வீச்சுகளால் நாங்கள் இருக்கும் கட்டிடம் அதிர்க்கின்றது.

பிள்ளைகள் அச்சத்தில் குளியலறைக்கு கூட செல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் சிறார்கள். எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது, இளைய மகனுக்கு 4 வயது” எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *