இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு: அதிகரிக்கும் பதற்றம்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஈரான் ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

பாலஸ்தீன போராளிகளை வாழ்த்துவதாகவும், பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை பாலஸ்தீன போராளிகளுக்கு துணை நிற்போம் எனவும் ஈரான் தலைவர் அயடோலா அலி காமேனியின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹீம் சஃபாவி கூறியுள்ளார்.

மேலும், இந்திய பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு: அதிகரிக்கும் பதற்றம் | Israel A Breakdown Of How The Hamas Attack

அத்தோடு, இஸ்ரேல் தற்காப்புப் படை 22 இடங்களில் தங்கள் துருப்புக்கள் சண்டையிடுவதை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *