இந்திய அணி அபார வெற்றி!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற நிலையில், அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Steven Smith 46 ஓட்டங்களையும் David Warner 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் R Jadeja 3 விக்கெட்டுக்களையும் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இதற்கமைய 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்று வெற்றியை தழுவியது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடிய KL Rahul 97 ஓட்டங்களையும் V Kohli 85 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Josh Hazlewood 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *