81 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஹைத்ராபாத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக Saud Shakeel மற்றும் Mohammad Rizwan ஆகியோர் தலா 68 ஓட்டங்களை பெற்றார்.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பெற்றார்.

பதிலுக்கு 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 67 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக Haris Rauf, 3 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *