முக்கிய சேவையை நிறுத்த தயாராகும் Google

 

ஒரு காலத்தில் ரேடியோவில் பாடல் கேட்பது என்பது பெரும்பாலான மக்களின் விருப்பத்தேர்வாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்படுத்தல்களால், விஷுவல் மீடியாவை நோக்கி மக்கள் நகர்ந்தனர். இருப்பினும் இன்றளவும் ஆடியோ வடிவு நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இதனால்தான் பாட்காஸ்ட் என்ற ஒன்று மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ளது. மக்களுக்கு விருப்பமான வகையில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்து வெளியிடும் கூகுள், சமீபத்தில் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி கூகுள் பாட்காஸ்ட் சில காலம் மட்டுமே இயங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 2024 இல் இருந்து கூகுள் பாட்காஸ்ட் முற்றிலுமாக இயங்காது என்றும், அதுமட்டுமின்றி இனி யூடியூப் மியூசிக் வழியாகத்தான்தான் பாட்காஸ்ட்டுகளை கேட்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடியோ தளங்கள் பிரபலமாக வளர்ந்து வந்த நிலையில், கூகுள் நிறுவனமும் தங்களின் பாட்காஸ்ட் பிளாட்பார்மை அறிமுகம் செய்தது. சந்தையில் குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டு வந்த கூகுள் பாட்காஸ்ட் விரைவில் நிறுத்தப்பட்டு அடுத்த ஆண்டு முதல் யூட்யூப் மியூசிக்கில் ரசிகர்களுக்காகவே பிரத்தியேகமான அம்சங்களுடன் வெளியிடப்படும். இதை யூடியூப் மியூசிக் தன்னுடைய ப்ளாக் போஸ்ட் ஒன்றில் பதிவு செய்துள்ளது.

யூடியூப் மியூசிக்கில் பாட்காஸ்ட்களை வெறும் ஆடியோ வடிவில் மட்டுமல்லாமல் வீடியோவாகவும் பார்க்கலாம். இதில் இணையம் இல்லாமல் ஆஃப்லைன் வழியாகவும் பார்க்கும் வசதி உள்ளது. தற்போதுவரை கனடா, அமெரிக்காபோன்ற ஐக்கிய நாடுகளில் பாட்காஸ்ட் பிரபலமாக உள்ளது. இது விரைவில் உலக நாடுகளில் அதிகம் விரும்பப்படுவதற்கான வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.

ஏற்கனவே கூகுள் பாட்காஸ்டுக்கு சந்தா செலுத்தியவர்கள் புதியதாய் அறிமுகம் செய்துள்ள கருவியை பயன்படுத்தி யூடியூப் மியூசிக் தளத்திற்கு அவர்கள் மாறிக் கொள்ளலாம். கூகுள் பாட்காஸ்ட் சந்தாதாரர்களின் சந்தாவிற்கு ஏற்றவாறு அவர்களுக்கான எக்ஸ்போர்ட் முறை இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதனால் கூகுள் பாட்காஸ்ட் தளத்திலிருந்து யூடியூப் மியூசிக் தளத்திற்கு மாறும்போது எவ்விதமான சிக்கலும் இருக்காது என கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *