Local

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ இலங்கையில்!

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் ஹோமியோபதி வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்திருந்தார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘Zombie Drugs’ என்பது விலங்குகளை அமைதிப்படுத்த, கட்டுப்படுத்த, மிருக வைத்தியர்களால் பாவிக்கப்படும் Tranqulizer வகை மருந்துகளை அதிக செறிவில், சட்டவிரோதமாக, ஏனைய போதைப் பொருட்களுடன் கலந்து இந்த Zombie Drug தயாரிக்கப்படுகிறது.

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இது தான் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும் நாமம். நாம் நினைப்பது போல யுத்தமோ, வடகொரியாவோ, ரஷ்யாவோ அல்ல. நியூயோர்க், பிலடெல்பியா, லிவர்பூல், லண்டன் போன்ற உலக பெரு நகரங்கள் இப்போது இந்த zombie வகை போதைப் பொருள் பாவனையால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி வருகின்றன.

அதிலும் குறிப்பாக இந்த நாடுகளில் வாழும் வாலிபர்கள், இளம் பெண்கள் இதற்கு அடிமையாவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் முழு நகரமும், நாடும் பாதிக்கப்படுகின்றது.

பாதிக்கப்படுபவர்கள் எதிர்கால சந்ததியினர் என்பதால் இது மிகப்பெரிய Pandemic போன்ற சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. பிரச்சினையின் பாரதூரம், இது zombie களின் நகர், இது zombie களின் வீதி என்று அழைக்கப்படும் நிலைக்கு இந்த நாடுகளில் நிலமை மோசமடைந்திருக்கிறது.

இந்த zombie வகை ட்ராக்ஸ்களின் பாவனையால், குறுகிய காலத்திலயே உடல் தசைகளை சிதைத்து விடும். பெரிய பெரிய புண்கள் உடலில் ஏற்படும். காலப்போக்கில் தசை நார்கள் பலமிழந்து, உடல் இயக்கம் தடைப்பட்டு, சமநிலை இல்லாமல் போகும். தள்ளாடிய நடை வரும்.

இந்த போதைப் பாவனைகளுக்கு எதிராக தொழிற்படும் , மீட்டெடுக்கும் எந்த மருந்துகளும் தற்போது பாவனையில் இல்லை. இதனால், இவ்வாறான சொம்பிக்கள் அதிக போதையினால் உயிரிழப்பை உடனடியாக சந்திக்க வேண்டி ஏற்படுகிறது. இது அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் பெரும் சவாலாகவே மாறியிருக்கிறது. அமெரிக்காவிலே கவலைக்கிடம் என்றால் நமது நாட்டில் சொல்லவா வேண்டும்??

நாட்டை ஆள்பவர்களும், சட்டத்தை நிலைநாட்டுபவர்களும் போதைப்பொருளில் இலாபம் அடைவதால் போதைப்பொருளுக்கு உரிய தீர்வைக் கொண்டுவருவதில் அக்கறை காட்டுவதில்லை எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading