இந்தியா -பாகிஸ்தான் போட்டி மீண்டும் நாளை!

ஆசிய கிண்ண தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய போட்டி நாளை (11) ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்தியா அணி24.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்கள் இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்தியா அணி சர்பாக Rohit Sharma 56 ஓட்டங்களையும் Shubman gill 58 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்

பாகிஸ்தான் அணி சர்பாக பந்து வீச்சில் Shaheen Afridi மற்றும் Naseem Shah தலா 1 வீக்கெட்களை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *