Local

மைத்திரியுடன்-லக்சா இரகசிய கலந்துரையாடலில்!

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்கத்தின் மாற்று அரசியல் குழுவான நிமல் லன்சா குழுவுக்கும் இடையில் அண்மையில் இரகசிய அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா இலங்கை திரும்பியதை அடுத்து நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரும் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நிமல் லன்சா அணி தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்திற்கு இடையூறாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பதவிகளை வகிக்கும் பலரின் பதவிகள் மிக விரைவில் மாற்றப்படவுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நானும் ஜனாதிபதியாக இருக்க தகுதியானவன்…”

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ‘நானும் ஜனாதிபதியாவதற்கு தகுதியானவன்…’ என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்கேற்ப, ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

லன்சாவுக்கும், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாகவும், இதனால் லன்சா வெளிநாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இராஜகிரிய பிரதேசத்தில் லன்சாவினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் பிரச்சார அலுவலகம் கடந்த சில நாட்களாக வெறிச்சோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியல் இயக்கமொன்றை ஸ்தாபிக்கும் இந்த பணியில் லன்சாவுக்கு மேலதிகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பங்குபற்றுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading