200 கோடி ரூபாவிற்காக கொலை செய்யப்பட்ட நடிகை ஸ்ரீதேவி?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. அந்த காலத்திலேயே கோலிவுட் முதல் பொலிவுட் வரை அனைத்து திரையுலகில் பணியாற்றி பேன் இந்தியா நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி, இதனால் இவருக்கென மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது. நடிகை ஸ்ரீதேவி இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றாலும், அவருக்கு இரண்டாவது மனைவியானார் ஸ்ரீதேவி.

திருமணத்துக்கு முன்பே லிவ்விங் டுகெதராக வாழ்ந்து கர்ப்பமான ஸ்ரீதேவி அதன்பின்னர் ஜான்வி, குஷி என இரண்டு மகள்களையும் பெற்றுக் கொண்டார். இப்படி இந்தியாவே கொண்டாடும் ஒரு நடிகையாக இருந்த ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது, அங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டம். பாத்ரூமில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பரும், அரசியல் மற்றும் சினிமா விமர்சகருமான வைத்தியர் காந்தராஜ், யூடியூப்பில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து பேசி உள்ளார். ஸ்ரீதேவி பாத் டப்பில் விழுந்து இறந்துவிட்டார் என்று சொல்வது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை பணத்திற்காக தான் போனி கபூர் திருமணமே செய்துகொண்டார். ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ளும் போது போனி கபூருக்கு பெரிய மகன் இருந்தார். கிட்டத்தட்ட அவருக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரே வயது.

ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு காரணமே பணம் தான். அதேபோல் அவரின் மரணத்திற்கும் பணம் தான் முக்கிய காரணம். மேலும் ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடி இன்சூரன்ஸ் இருந்ததால் தான் அவர் கொல்லப்பட்டாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆமா அப்படி மரணத்தின் பின்னால் நிறைய விஷயம் இருக்கு என கூறிய அவர், போனி கபூர், மோடிக்கு நெருக்கமானவராக இருந்ததால் தான் தப்பித்துவிட்டார். ஸ்ரீதேவி என்ன தியாகம் பண்ணாங்கனு அவரது உடலுக்கு தேசிய கொடி போத்தினார்கள்னு யாருக்கும் தெரியல” என வைத்தியர் காந்தராஜ் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *