Paracetamol மருந்தை நீண்ட காலம் பயன்படுத்தினால் காத்திருக்கும் ஆபத்து!

Paracetamol மருந்தை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தும் போது காத்திருக்கும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Paracetamol பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டது.

Edinburgh பல்கலைக்கழகத்தின் ஆய்வில் சுமார் 110 பேர் பங்கேற்றனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கைச் சேர்ந்தவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை உட்கொள்பவர்களாகும்.

கனடாவில் புதிதாக கடை திறந்தவருக்கு மறுநாளே நேர்ந்த கதி
ஆய்வில் அனைவரும் இரண்டு வாரம் வரை நாளொன்றுக்கு 4 முறை 1 கிராம் paracetamol மருந்தை உட்கொண்டனர். அவர்கள் பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்கு paracetamol மருந்தை உட்கொள்ளவில்லை.

paracetamol-ஐ உட்கொள்ளும்போது தனிநபர்களின் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறின. அது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறி என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

நீண்டகாலப் பராமரிப்புக்கு paracetamol மருந்தைப் பரிந்துரைக்கும்போது அதன் ஆபத்தையும் பலனையும் பரிசீலனை செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் வலி நிவாரண மருந்தாக paracetamol-ஐ உட்கொள்வது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளது. சிலர் முடிவுகளை உறுதிசெய்வதற்குக் கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *