Uber வாடிக்கையாளர்கள் தவறுதலாக விட்டுச் செல்லப்பட்ட பொருட்களின் விபரங்கள்!

இலங்கையின் முன்னணி ஓட்டுநர் உதவி வழங்குநர் செயலியான Uber, தமது வாடிக்கையாளர்களினால் தவறுதலாக விட்டுச் செல்லப்பட்ட பொருட்களின் விபரத்தை அதன் Lost and Found Index இன் 2023 பதிப்பில் பகிர்ந்துள்ளது. கடந்த ஆண்டு Ubers இல் பயணிகள் விட்டுச் சென்ற பொதுவான மற்றும் தனித்துவமான பொருட்களை பற்றிய விவரங்களையும், பயணிகள் அதிகம் மறக்கும் நேரங்களையும் இந்த வருடாந்திரப் பட்டியல் பகிர்ந்து கொள்கிறது.

கோழி, கித்தூள் சர்க்கரை, மா, திரைப்பட டிவிடிகள், தங்க நகைகள், ஐபோன் (கையடக்கத் தொலைபேசி), தண்ணீர் போத்தல்கள் என பலதரப்பட்ட பொருட்களை இலங்கையர்கள் தாம் பயணித்த Uber வாகனங்களில் விட்டுச்சென்றுள்ளனர். தரவு போக்கின் (data trend) உதவியுடன், Uber இன் Lost and Found Index ஆனது, பயணிகள் தமது பொருட்களை Uber வாகனகத்தில்  மறந்து விட்டு சென்றால், ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் எவ்வாறு மீளவும் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக வேடிக்கையான ஆனால் பயனுள்ள முறையில் கற்பிப்பதை Lost and Found Index நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில், தொலைபேசிகள், கேமராக்கள், கண்ணாடிகள், முதுகுப்பைகள், பைகள், பணப்பைகள், ஆடைகள் மற்றும் மளிகைப் பொருட்கள், இலங்கை முழுவதும் உள்ள Uber வாகனங்களில் அடிக்கடி விட்டுச்செல்லப்பட்ட பொருட்களின் பட்டியலில் முதலிடங்களைப் பிடித்தன. ஆப்பிள் ஐபோன்கள், சாம்சங் ஸ்மார்ட்போன்கள், Nike தண்ணீர் போத்தல், மற்றும் Gucci கைப்பை போன்ற உலகத்தரம் வாய்ந்த பொருட்களும் விட்டுச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது! இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் , ஆப்பிள் போன்களை விட இரண்டு மடங்கு அதிக தடவை ஆண்ட்ராய்டு போன்கள் விட்டுச்செல்லப்பட்டுள்ளன என்பதே.
இந்த பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த Uber இன் Rides இற்கான இலங்கைக்கான முகாமையாளர் தனுஷிகா சிவநாதன், “உங்கள் கடைசி சவாரியின்போது ஒரு முக்கியமான அல்லது நாம் பொக்கிஷமாகக் கருதும் பொருளை விட்டுவிட்டால் ஏற்படும் பீதியை நாம் அனைவரும் அனுபவித்துள்ளோம். எமது பயணிகள் Uber உடன் எப்போதும் தொடர்பு கொண்டு தங்கள் உடைமைகளை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம். இந்தக் கருத்துக்கணிப்பு எங்கள் பயணிகள் உள்ளூர் உணவு வகைகள் முதல் குழந்தை காலணிகள் வரை விட்டுச் சென்றது பற்றிய தரவுகளை கொண்டுள்ளதோடு, விட்டுச்சென்ற பொருளை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையை எழுப்ப Uber செயலியில் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகளையும் அவர்களுக்கு நினைவூட்டும். வேலைப்பளு மிக்க பயணப் பருவம் எங்களுக்கு முன்னால் இருப்பதால், உங்கள் அறிவை புதுப்பிக்க இது ஒரு நல்ல நேரம் என்று நாங்கள் நினைத்தோம்.”

சில சிறப்பம்சங்கள்

● கடந்த ஆண்டு ஏப்ரல் 9 அன்று இலங்கையர்கள் மிகவும் மறதியாக இருந்தனர் – ஒருவேளை புத்தாண்டுக்கு முன் கடைசி நிமிட பொருள் கொள்வனவு செய்யும் அவசரம் காரணமாக இருக்கலாம்

● மாலை நேரங்களில் மக்கள் அதிகளவு மறதியாக இருந்தனர். வேலை நாளுக்குப் பிந்தைய மணிநேரம், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, அதிகபட்சமாக பொருட்களை விட்டுச் சென்ற நேரம் ஆகும்.

● ஆச்சரியமற்ற வகையில், வாரயிறுதியில் (வெள்ளி முதல் ஞாயிறு வரை) Ubers இல் விட்டுச் சென்ற பொருட்களுடன் அதிக சவாரிகள் இடம்பெற்றன

Uber Lost and Found Index Sri Lanka 2023 இன்படி விட்டுச்செல்லப்பட்ட பொருட்களின் பட்டியல் பிவருமாறு:

தொலைக்கப்பட்ட ‘தனித்துவமான’ பொருட்களில் முதல் 10 இடங்களை பிடித்த பொருட்கள்
1. தொலைபேசி
2. தொலைபேசி இலக்க புத்தகம்
3. தங்க நகைகள்
4. கடன் அட்டை
5. திரைப்பட டிவிடிகள்
6. பணப்பை/பர்ஸ்/கைப்பை
7. குழந்தை காலணிகள்
8. கோழி
9. உணவு (கித்தூள் சர்க்கரை மற்றும் மா)
10. Nike தண்ணீர் போத்தல்

பொதுவாக விட்டுச்செல்லப்பட்ட பொருட்களில் முதல் 10 இடங்களை பிடித்த பொருட்கள்
1. தொலைபேசி
2. கண்ணாடிகள்/சன்கிளாஸ்கள்
3. முதுகுப்பை/பை/சாமான்கள்
4. ஆடை
5. மளிகை பொருட்கள்
6. பணப்பை/பர்ஸ்
7. நகைகள்
8. தண்ணீர் போத்தல்
9. ஒப்பனை பொருட்கள்
10. கைக்கடிகாரம்

ஒரு ஆண்டில் மக்கள் அதிகம் மறக்கும் மூன்று நாட்கள்
1. ஏப்ரல் 9
2. மார்ச் 31
3. மார்ச் 26

மக்கள் அதிகளவு மறக்கும் வாரத்தின் முதல் 3 நாட்கள்: வார இறுதி
1. சனிக்கிழமை
2. வெள்ளிக்கிழமை
3. ஞாயிறு

இலங்கையர்களுக்கு ஒரு நாளில் அதிக மராத்தி ஏற்படும் நேரம்: மாலை
1. மாலை 6 மணி
2. மாலை 7 மணி
3. மாலை 5 மணி

மறக்கப்பட்ட பொருட்களில் முதல் 5 இடங்களைப்பிடித்த வண்ணங்கள்
1. சிவப்பு
2. நீலம்
3. மஞ்சள்
4. றோஸ் நிறம்
5. இளஞ்சிவப்பு

“தொலைந்து போன பொருட்களை” மீளவும்பெற விரும்பும் பயணிகளுக்கான விரைவான வழிகாட்டி இதோ:

● “Menu” சின்னத்தை அழுத்துங்கள்
● “Your Trips” என்பதை அழுத்தி, உங்கள் பொருளை விட்டுச் சென்ற பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்
● “Report an issue with this trip” என்பதை அழுத்தவும்
● “I lost an item” என்பதை அழுத்தவும்
● “Contact my driver about a lost item” என்பதை அழுத்தவும்
● கீழே சென்று, உங்களை தொடர்பு கொள்ள விரும்பும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். ‘Submit’ ஐ அழுத்தவும்.
● நீங்கள் தொலைத்தது உங்கள் கையடக்கத்தொலைபேசியாக இருந்தால், மேலே உங்கள் இலக்கத்திற்குப்பதிலாக உங்கள் நண்பரின் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடவும்
● உங்கள் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வரும். உங்கள் ஓட்டுனரின் கையடக்கத்தொலைபேசி எண்ணுடன் நீங்கள் நேரடியாக இணைவீர்கள். தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் பயணி மற்றும் ஓட்டுநர் இலக்கங்களை அநாமதேயமாக நாம் வைத்திருப்போம்
● உங்கள் ஓட்டுநர் உங்கள் பொருளைக் கண்டுபிடித்ததை உறுதிசெய்தால், அதனை நீங்கள் பெறுவதற்கு, இருவரும் கலந்து பேசி ஒருவருக்கொருவர் வசதியான நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்யுங்கள்.
● உங்களால் ஓட்டுனருடன் இணைய முடியாவிட்டால், இழப்பு தொடர்பான புகாரினை அளிக்க ‘in-app support’ இனை அணுகவும். Uber இன் உதவி குழு உங்களுக்கான உதவிகளை வழங்க முன்வரும்.
ஓட்டுனரை சந்திக்க உங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்க முடியவில்லை எனில், உங்கள் பொருளை மீட்டெடுக்க Uber Connect ஐப் பயன்படுத்தவும். Uber இன் அதே நாள் விநியோக சேவையான Uber Connect ஆனது Uber செயலியின் மூலம் பொதிகள் மற்றும் பார்சல்களை அனுப்பவும் பெறவும் உதவுகின்றது. உங்களுக்கு அவசரமாக பொருட்கள் தேவைப்படும் நேரங்களில் ‘Uber Connect’ ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

Uber பற்றி

இயக்கத்தின் மூலம் வாய்ப்பை உருவாக்குவதே Uber இன் நோக்கம் ஆகும். ஒரு எளிய சிக்கலைத் தீர்க்கும் நோக்கோடு 2010 ஆம் ஆண்டில் எமது பயணத்தைத் தொடங்கினோம்: ஒரு பொத்தானை அழுத்தும்போது சவாரிக்கான அணுகலை எவ்வாறு பெறுவது? 15 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களுக்குப் பின்னர், மக்கள் அவர்கள் இருக்க விரும்பும் இடத்திற்குச் செல்ல உதவும் தயாரிப்புகளை நாம் உருவாக்குகிறோம். நகரங்கள் வழியாக மக்கள், உணவுபொருட்கள் மற்றும் ஏனைய பண்டங்கள் கொண்டு செல்லப்படும் முறையை மாற்றுவதன் மூலம் Uber என்பது புதிய சாத்தியக்கூறுகளுக்கு உலகைத் திறக்கும் ஒரு தளமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *