Local

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (11) காலை 11 மணிக்கு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில் செல்லும் பல நாள் மீன்பிடி படகுகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“மோகா” சூறாவளி காலை 5.30 மணியளவில் 11.2N மற்றும் 88.1Eக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.

அது வடக்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த சில நாட்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட அகலாங்குகள் 03N இற்கும்20N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள்85E இற்கும்100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading